கட்டார் நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நபர் ஒருவரை ஏமாற்றிப் பண மோசடி செய்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்குக் கிடைக்கப் பெற்ற 6 முறைப்பாடுகளுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளி அடிப்படையில் எப்பாவல, எலதிவுலவ்வெவ பகுதியில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு முறைப்பாடு செய்த நபர்களிடம் சந்தேகநபர் சுமார் 16 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளார் என கூறப்படுகின்றது.
அத்தோடு அவர் ஓய்வுபெற்ற இராணுவ, விமானப்படை மற்றும் கடற்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளிடமும் இவ்வாறு மோசடியாகப் பணம் பெற்றுகொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர் ஒரு இடைத்தரகர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.