போலி கல்விச்சான்றிதழ்களை பயன்படுத்தி காவல்துறை கான்ஸ்டபிளாக சேவையில் இணைந்த ஒருவர் கொழும்பு மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு கைதானவர் கல்கிஸ்ஸை நீதிவான் முன்னிலையில் பிரசன்னபடுத்தப்பட்ட போது, 15 இலட்சம் ரூபா அடங்கலான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், மஹவிலச்சிய காவல் நிலையத்தில் பயிலுனர் கான்ஸ்டபிள் சாரதியாக கடமையாற்றியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறு சான்றிதழை போலியாக தயாரித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.