திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இச் இடத்துக்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதுடன், குறித்த தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த தீப்பரவல் சம்பவத்தினால் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் என்பவற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பத்தில் குறித்த வைத்தியசாலையிலுள்ள நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்குஇ எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லையென காவல்துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர்.