யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி போலீஸ் பிரிவிற்கயகு உட்பட்ட வத்திராயன் பகுதியில் சுமார் 600 லிட்டர் கோடாவும், கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் என்பன மருதங்கேணி போலீசாரால் நேற்றைய யினம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது மருதங்கேணி போலீஸ் பிரிவிற்குட்பட்ட வத்திராயன் கிராமத்தில் கசிப்பு உற்பத்தி தொழிலகம் ஒன்று இயங்கிவருவதாக மருதங்கேணி பொலீஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு 08/09/2023 குறித்த உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைத்த மருதங்கேணி போலீசார் நான்கு கொள்கலன்களில் கோடா 600 லீட்டருக்கு மேற்பட்ட கசிப்பு வடிப்பதற்கு தேவையான கோடா மற்றிம் பொருட்கள் என்பனவற்றை கைப்பற்றியுள்ளனர்.
அத்தோடு சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக மருதகக்கேணி பொலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.