இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மின்சார கட்டணத்தில் நிவாரணம் வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி Marc Andre Francheவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.
மேலும் இந்த கலந்துரையாடலில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மின்சாரக் கட்டணத்தைச் சமன்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கருத்து பரிமாற்றப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல்கள் நேற்று அமைச்சில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான பசுமை நிதி வசதிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.