மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாக உள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் குறித்த வர்த்தமானி அடுத்த வாரம் வெளியிடப்படும் என உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07.09.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
எனினும் இதற்கான ஆயுர்வேத சட்டத்திருத்தம் கடந்த 5ம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதற்கான அறிவிப்பின் மூலம் அதன் சட்டம் நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.