ஆங்கிலத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமான பிரபல ஹொலிவூட் திரைப்படமான ஹெரி பொட்டரில் பணியாற்றிய செர் மைக்கெல் (Sir Michael) இன்று(28) வியாழக்கிழமை காலமானார்.
அத்தோடு செர் மைக்கெல் தொலைக்காட்சி, திரைப்படங்கள், வானொலி என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.
ஜே.கே. ரொவ்லிங் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட பிரபல ஹொலிவூட் திரைப்படமான ஹெரி பொட்டர் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
செர் மைக்கெல் லண்டனில் உள்ள ரோயல் நெஷனல் திரையரங்கில் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.
செர் மைக்கெல் கடந்த 1998ஆம் ஆண்டு பொழுதுபோக்கு துறையில் சிறந்த சேவைகளுக்காக நைட் பட்டம் பெற்றுள்ளதுடன், பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.