சுகாதார பூச்சியியல் அலுவலர்களின் பற்றாக்குறையால் தொற்றுநோய் நிலைமைகளை நிர்வகிப்பதில் நெருக்கடிகள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என பூச்சியியல் அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்சமயம் சுமார் 120 சுகாதார பூச்சியியல் அலுவலர்கள் பதவிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அதன் தலைவர் நஜித் சுமனசேன தெரிவித்தார்.
இவ்வாறானதொரு நிலைமை இருந்தும் இவ்வருடம் மாத்திரம் சுமார் பத்து சுகாதார பூச்சியியல் அலுவலர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்தோடு அவர்களில் சிலர் விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளதாகவும், சிலர் வேலைகளை விட்டுவிட்டு வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வருடாந்தம் சுமார் 05 உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவதால், தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன மேலும் தெரிவித்தார்.