அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம்-வெளியானது தகவல்..!

keerthi
0

 



அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக  இந்த மாதம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது எதிர்வரும் 7ஆம் திகதி ஜோ பைடன் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் இந்த விஜயத்தின் போது அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதுடெல்லியில் எதிர்வரும் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடவுள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில்  எதிர்வரும் 8ம் திகதி இந்திய பிரதமருக்கும், அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அத்துடன் ஜி20 மாநாட்டில் காலநிலை மாற்றம் மற்றும் சர்வதேச பொருளாதார நிலைமை என்பன தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top