திலீபன் நினைவு ஊர்தி பயணத்தில் தாக்குதலிற்குள்ளானோர் இன்று திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் பாதுகாப்பாக வவுனியாவை அடைந்தனர்.
நேற்றைய தினம் வாகன ஊர்தியும் வந்தடைந்துள்ளது. அத்தோடு இத் தாக்குதலிற்குள்ளானவர்கள் தொடர்ந்தும் பயணிப்பதில் அச்சறுத்தல் காணப்பட்ட நிலையில், பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.
இதேவேளை, இன்று (18) முல்லைத்தீவிலிருந்து வாகன ஊர்தி அஞ்சலிக்காக பயணத்தை ஆரம்பிக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.