தையிட்டி விகாரை அகற்றப்பட்டு மக்களுடைய காணிகள் வழங்கப்பட வேண்டும், அதுதான் மக்களுடைய வேண்டுகோளாகவும் இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கூறியுள்ளளார்.
நேற்று (12) யாழ். தைட்டியில் இடம்பெற்ற காணி அளவீட்டுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தையாட்டி விகாரை காணியை அளவீடு செய்து விகாரைக்கு வழங்குவதற்கான முயற்சிகள் இன்று மேற்கொள்ளப்படுகின்ற போது அதனை தடுத்து நிறுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல பேர் இங்கே திரண்டு இந்த அளக்கின்ற விடயத்தை தடுத்திருக்கின்றார்கள்.
மிக முக்கியமாக மக்கள் இங்கு திரண்டதாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி சார்ந்தவர்கள் வருகை தந்ததாலும் இந்த அளவீட்டு திட்டம் நிறுத்தப்பட்டதாக உணரப்படுகிறது, இருந்தாலும் கூட இதற்கான மாற்றீட்டு காணி அல்லது வேறு இடங்கள் என்று சொல்லப்படுவதெல்லாம் ஒரு ஏமாற்று வித்தைகள்,
அத்தோடு இதில் மிக முக்கியமாக இந்த மக்களுடைய காணி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எந்தவித அனுமதியும் இல்லாமல் சாதாரண மக்களுக்கு மதில் கட்டுவதற்கான அவர்களை போட்டு எவ்வளவு தூரம் படாத பாடுபடுத்தும் இந்த அரசன் நிறுவனங்கள் எந்த அனுமதியும் இல்லாமல் கட்டப்பட்ட இந்த விகாரை அகற்றப்பட்டு காணி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
அதுதான் இந்த மக்களுடைய வேண்டுகோளாகவும் இருக்கின்றது.அத்தோடு அவர்களுக்கு விகாரைக்கு என்று சொந்தமாக காணியிருந்தால் அதில் அவர்கள் அமைத்துக் கொள்ளலாம் அல்லது இருந்தால் அதைப் பற்றி பரிசீலிக்கலாம்.
ஆனால் அரசாங்கத்தினுடைய இந்த வலுக்கட்டாயமான மக்களை ஏமாற்றுவதற்கான இந்த நடவடிக்கையை உடன் நிறுத்த வேண்டும்.
மிக முக்கியமாக வெளியிலே ஒரு பகட்டாக காட்டப்படுகிறது ஒரு அமைச்சர் வந்து அளவீடு செய்வதற்கு தயார் நிலை காட்டுவது போல அளவோடு செய்வது போல காட்டிக் கொள்ளுகிறார், ஆனால் அதற்குப் பின்னாலே ஒரு செய்தி இந்த காணிகளை அளவீடு செய்து அரசாங்கத்துக்கு எடுக்கக்கூடிய காணிகளை எடுக்கப் போகின்றார்கள் என்பது தான் மறைமுகமாக உணர்த்தப்படுகிறது.
எங்களுடைய மக்கள் ஏமாற்றப்படுவதற்கான சூழல் இருக்கின்றது நாங்கள் எல்லோரும் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும் நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்தால் தான் இந்த விடயத்தில் சேர்ந்திருந்தால் தான் எங்களுக்கு எதிராக நடக்கின்ற இந்த சதி பின்னர்களுக்கு எதிராக நாங்கள் ஒரு அணியாக இந்த விடயத்தை கையாள முடியும்.
ஆகவே இதனை முழுமையாக எதிர்க்க வேண்டிய தேவையில் நாங்கள் எல்லோரும் இருக்கின்றோம். இதனை தடுப்பதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொள்ளவும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் சொன்னது போல இது ஏற்கனவே பிரதேசம் மட்டும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இது கட்டக்கூடாது என எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டு, இப்போ திரும்பவும் அந்த குழு இந்த குழு போடுவது என்று சொல்லி ஜனாதிபதியால் ஏமாற்றப்படுகின்ற இந்த வித்தைகளுக்கு நாங்கள் ஒரு புரிதலை வைத்துக் கொண்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு சரியான முறையில் நாங்கள் செயற்பட வேண்டும் என்பதை கேட்டு இது ஒரு மிக முக்கியமானது தொடர்ந்து நாங்கள் எல்லோரும் அவதானித்து கண்காணிப்போடு இருக்கின்ற பொழுது தான் எங்கள் மக்களுடைய அந்த நிலத்தை நாங்கள் சரியான முறையில் காப்பாற்ற முடியும் இந்த அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக, பௌத்த பேரினவாதத்துக்கு எதிராகவும் நாங்கள் சரியான முறையில் செயல்பட தவறினால் இன்னும் இன்னும் இந்த நடவடிக்கைகள் தொடரும் ஆகவே அதற்காக எல்லோரும் ஒன்றிணைவோம் என தெரிவித்துள்ளார்.