நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று(19) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 318 ரூபா 26 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் , அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 60 சதமாக காணப்பட்டது.
அத்தோடு , அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 329 ரூபா 60 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் , அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 328 ரூபா 83 சதமாக காணப்பட்டது.