பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.
இருபதுக்கு இருபது உலககிண்ண தொடரில் பங்கேற்பதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி நாட்டிலிருந்து வெளியேறினார்.
இவ்வாறுஇருக்கையில் பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட தனுஷ்க்க குணதிலக்க 360 தினங்களின் பின்னர் மீண்டும் நாட்டிற்கு வருகைதரவுள்ளார்.
இதற்கமைய இலங்கை கிரிக்கட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க எதிர்வரும் நவெம்பர் மாதம் நான்காம் திகதி நாட்டிற்கு வருகை தருவதற்கு திட்டமிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் இருந்து தனுஷ்க குணதிலக்க விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணைகள் தொடர்ச்சியாக 4 நாட்களாக சிட்னியில் இடம்பெற்றன.
எனினும் இந்த நிலையில் சாட்சி கோரல்கள் மற்றும் எழுத்துமூல சமர்ப்பனங்கள் கடந்த 4 நாட்களாக நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட நிலையில் தனுஷ்க குணதிலக்க குற்றமற்றவர் என நீதிபதி சாரா ஹகெட் தீர்ப்பு வழங்கினார்.