ஹெரோயின் போதைப்பொருளுடன் கொழும்பு மாநகர சபையின் அலுவலக ஊழியர் ஒருவர் யாழில் கைது செய்யப்பட்டுள்ளார்
கொழும்பில் இருந்து பருத்தித்துறைக்கு ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக 30 கிராம் ஹெரோயினுடன் நேற்று காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.