வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் படையினர் தங்கியிருந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எனினும் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் இன்று (30) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறவூர் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய திருமணமான உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.
அத்தோடு பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி திரு.நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
“வெலிகந்த பொலிஸ் நிலைய படைமுகாமில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இந்த மரணம் ஏதேனும் விபத்தா அல்லது தற்கொலையா அல்லது கொலையா என இதுவரை தெரியவில்லை. பிரதேச குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சம்பவ இடத்தை சோதனை செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.