சர்ச்சைக்குரிய யுரேனிய வெடிபொருட்களை உக்ரேனுக்கு வழங்கும் அமெரிக்கா..!

keerthi
0 minute read
0





அமெரிக்கா யுரேனியம் அடங்கிய சர்ச்சைக்குரிய வெடி பொருட்களை  முதன்முறையாக உக்ரேனுக்கு வழங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

உக்ரேனுக்கான புதிய உதவிகள் தொடர்பான தகவல்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படுமென இரண்டு அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்தோடு இந்த உதவி 240 முதல் 375 மில்லியன் அமெரிக்க டொலர் வரை பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குறித்த உதவியில் உள்ளடக்கப்படும் விடயங்கள் தொடர்பில் அமெரிக்கா இன்னும் இறுதி செய்யவில்லை எனவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எனினும் இந்த விடயம் தொடர்பில் வெள்ளை மாளிகை இதுவரையில் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top