ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிரதிநிதித்துவம் செய்யும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது அதிகாரப்பூர்வ துப்பாக்கியைக் கொண்டு வானத்தை நோக்கி சுட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்பு தொகுதியில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும் குறித்த இராஜாங்க அமைச்சர் மதுபோதையில் இருந்தார் எனவும் வீட்டின் மாடியில் இருந்து இவ்வாறு வானத்தை நோக்கி சுட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இராஜாங்க அமைச்சரும் அவருடன் இருந்த நண்பர்களும் மதுபோதையில் இருந்தனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு இந்த இராஜாங்க அமைச்சர் வெலிக்கடை ஏற்கனவே சிறைச்சாலைக்குள் அத்துமீறி பிரவேசித்தமை உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும்,மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.