வாட்ஸ் அப் அறிமுகம் செய்யும் புதிய தொழினுட்பம்

keerthi
0

 


கடந்த சில காலமாக வட்ஸ் அப் நிறுவனம் தொடர்ந்து புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றமை அனைவருக்கும் தெரிந்த ஒன்று.


இதற்கிடையே இப்போது வட்ஸ் அப் தளம் பலரும் எதிர்பார்க்கும் "சனல்" வசதியைக் கொண்டு வந்துள்ளது.


150 நாடுகளில் இந்த சனல் வசதி இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் உள்ள பிராட்காஸ்ட் சனல் போல் இது அமைக்கப்பட்டுள்ளது.





டெலிகிராம் தளத்தில் இந்த வசதி ஏற்கனவே பல காலமாக இருக்கும் நிலையில், இப்போது வட்ஸ் அப் தளத்திலும் அந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.


வழக்கமான சாட்கள் அல்லது க்ரூப்களில் இருந்து இந்த சனல்கள் மாறுபட்டதாக உள்ளது.


குறிப்பாக இதில் ஒரு தரப்பினர் மட்டுமே மெசேஜ் அனுப்ப முடியும். உதாரணமாக நீங்கள் ஒரு சனலை பின் தொடர்ந்தால் அவர்கள் அனுப்பும் மெசேஜ் மட்டுமே உங்களுக்கு வரும்.


உங்களால் எந்தவொரு மெசேஜ்ஜையும் அனுப்ப முடியாது. வட்ஸ்அப் க்ரூப்களை போல இல்லாமல் சனலை எத்தனை பேர் வேண்டுமானாலும் பின் தொடரமுடிந்த வசதியை சேர்க்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top