களுத்துறை - கொழம்பகேவத்தை பகுதியில் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு 61 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண வீடு ஒன்றுக்கு சென்ற நிலையில் அங்கு ஏற்பட்ட தகராற்றில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கு காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.