யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பதற்காக கொழும்பு சுகாதார அமைச்சின் 5 அதிகரிகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு இன்று வருகை தரவுள்ளனர்.
அதாவது காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 7 வயது சிறுமியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.
சிறுமியின் கையில் போடப்பட்டுள்ள "கனூலா" மற்றும் அவருக்கு கொடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்து செறிவூட்டப்படாமல் ஏற்றப்பட்டதாலேயே கை அகற்ற வேண்டி வந்ததாக பெற்றோர் குற்றம் சுமத்தி பொலிசில் முறைப்பாடு மேற்கொண்டு வழக்கு நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது.
இவ்வாறுஇருக்கையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணையை நடத்துவதற்காக கொழும்பு சுகாதார அமைச்சை சேர்ந்த 5 சுகாதார அதிகாரிகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனைக்கு இன்று வருகை தந்து விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.