நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து இதுவரை பல வதந்திகள் இணையத்தில் கசிந்த வண்ணம் இருந்தது.அதாவது தன்னுடைய பள்ளி பருவ நண்பரை தான் கீர்த்தி திருமணம் செய்துகொள்ள போகிறார் என ஏற்கனவே கூறப்பட்டது.
இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் கீர்த்தி தரப்பில் இருந்து வெளிவரவில்லை. அதன்பின்னர், கேரள தொழிலதிபருடன் கீர்த்திக்கு திருமணம் என கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு கீர்த்தி மறுப்பு தெரிவித்தார்.
அதே போல் சில ஆண்டுகளுக்கு முன் அனிருத்துடன் திருமணம் என கிசுகிசுக்கப்பட்டது. அதை கீர்த்திக்கு நெருக்கமானவர்கள் மறுத்தனர். இந்நிலையில், தற்போது அதே தகவல் மீண்டும் வைரலாகி வருகிறது.
எனினும் இதுகுறித்து கீர்த்தி விளக்கம் கொடுத்துள்ளார். இதில், என்னுடைய திருமணம் குறித்து பரவும் தகவல் தவறானது. அனிருத் தனக்கு மிகவும் நல்ல நண்பர் என தெரிவித்துள்ளார்.
மேலும் திருமணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு 'திருமணம் நடக்கும்' என்று மட்டுமே கூறியுள்ளார் கீர்த்தி. இதன்மூலம் அனிருத்துடன் திருமணம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.