திருத்தம் செய்யப்பட்டு மீள நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ள, உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு இந்த சட்டமூலத்தில் எவ்வாறான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டாலும், அதற்கு தமது தரப்பு எதிர்ப்பை வெளியிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.