கொரிய தீப கற்பத்தில் வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை காரணமாக பதற்றம் நிலவுலதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதாவது தங்களது நாட்டின் பாதுகாப்புக்காக தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனை பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதும் வடகொரியா இந்த பயிற்சிகளை உடனடியாக நிறுத்தும்படி முன்னதாக எச்சிரிக்கை விடுத்திருந்தது.
எனினும், தென்கொரியா தொடர்ந்தும் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறுஇருக்கையில் தென்கொரியாவில் உள்ள இராணுவ நிலைகள் மற்றும் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை போன்றும், போர் ஏற்பட்டால் தென்கொரிய எல்லைகளை எவ்வாறு ஆக்கிரமிப்பது குறித்தும் வடகொரியா ஒத்திகையை முன்னெடுத்து வருகின்றது.
எனினும் இதற்காக 2 நவீன ஏவுகணைகளை வடகொரியா அனுப்பி சோதனை நடத்தி வருகின்றது.
வடகொரியாவின் இந்த செயலானது சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறும் என தென்கொரியா தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.