நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நந்தவனப் பகுதியில், உள்ள காளை மாடு முட்டியதில், ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இருபாலை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே உயிரிழந்தார்.
அதாவது மாடு முட்டியதில் காயமடைந்த அவர், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.