மைத்திரிபால சிறிசேன தலமை வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, கட்சியின் பதில் பொதுச் செயலாளராக மாகாண சபை முன்னாள் முதலமைச்சரான சரத் ஏக்கநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் சரத் ஏக்கநாயக்க ஆகியோரிடம் வினவியது.
குறித்த விடயத்தை அவர்கள் இருவரும் தென்னிலங்கை செய்தி சேவை ஒன்றுக்கு உறுதிப்படுத்தினர்.