கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் முழுமையான ஐந்து மனித எச்சங்கள் மீட்பு

keerthi
0

 


முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் 8 ஆவது நாளாக நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியின் போது முழுமையான 5 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

 எனினும் குறித்த புதைகுழியில் இருந்து இதுவரை 14 மனித எலும்புக் கூட்டுத்தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

 முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் கடந்த ஆறாம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. 

 இவ்வாறுஇருக்கையில்  8 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது. 

 எனினும் குறித்த அகழ்வு பணிகள், தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, சட்டத்தரணி கே.எஸ். நிரஞ்சன், தடயவியல் காவல்துறையினர், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன. 

 இதனடிப்படையில் நேற்றைய அகழ்வு பணியின் போது, ஆடையொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குரிய இ-1124 அடையாள இலக்கமும் மீட்கப்பட்டுள்ளது. 

 இவ்வாறுஇருக்கையில், அகழ்வுபணியானது இன்றைய தினமும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top