தென்னிந்திய நடிகரும் இயக்குனரும் ஆன நடிகர் மாரிமுத்து இறந்துவிட்டார் என சற்றுமுன் செய்தி வெளியாகி உள்ளது.
இவருக்கு தற்போது 56வயது என கூறப்படுகின்றது. இவர் மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று மரணமடைந்துள்ளார்.
இயக்குனர்கள் வசந்த், எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம், சீமான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மாரிமுத்து.
வசந்த்திடம் ஆசை, ரிதம் உள்ளிட்ட நான்கு படங்களிலும், எஸ்.ஜே.சூர்யாவிடம் வாலி படத்திலும், சீமானின் முதல் படமான பாஞ்சாலாங்குறிச்சியிலும், மணிரத்னத்திடம் பாம்பே உள்ளிட்ட படத்திலும் வேலை மாரிமுத்து செய்திருக்கிறார்.
பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடிப்பில் புலிவால், உள்பட சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் ஜீவா, பரியேறும் பெருமாள், கொம்பன் என பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்.அதுமட்டுமல்லாது சமீபத்தில் வெளியான ஜெயிலரிலும் நடித்துள்ளார்.
இவர் தற்போது எதிர் நீச்சல் சீரியலில் நடித்து மிக உச்சகட்ட வரவேற்பை பெற்றுள்ளார். மாரிமுத்து என்று சொல்வதை விட அவரை ஆதி குணசேகரன் என்ற அவரது கதாபாத்திரத்தை சொன்னால் தான் மக்களுக்கு தெரியும். அந்த அளவிற்கு பிரபலமாக உள்ளார்.