கனடாவில் அடைக்கலம் பெற்றுள்ள பயங்கரவாதிகள்: வெளிவிகார அமைச்சர் அலி சப்ரி காட்டம்

keerthi
0

 



கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி  காட்டமாக தெரிவித்துள்ளார்.


நியுயோர்க்கில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்,


கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆதாரமற்ற பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர் என்பதால் அவரது கருத்துக்கள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை.



அத்தோடு சில பயங்கரவாதிகள் கனடாவில் அடைக்கலம் பெற்றுள்ளனர். ஆதாரங்கள் அற்ற கடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சுபாவம் கனடா பிரதமருக்கு உள்ளது. இலங்கை விவகாரத்திலும் கனடா பிரதமர் அவ்வாறு நடந்துகொண்டார்.


இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக பெரும் பொய்யை சொன்னார். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.


கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளது என்ற கனடா பிரதமரின் குற்றச்சாட்டினால் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலை உருவாகியுள்ள நிலையிலேயே இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top