வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் முன்னறிவிப்பு இன்றி விலகுவார்கள் ஆயின் எதிர்காலத்தில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படுமென பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் மயக்க மருந்துவ நிபுணர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் வைத்தியசாலையில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக நேற்று (05) தகவல் வெளியாகியிருந்தது.
மேலும் இது தொடர்பில் ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.