கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பில் விசேட அறிவிப்பு

tubetamil
1 minute read
0

 கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பில் தொழில் அதிபர்களுடனான இறுதிக் கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை (04.09.2023) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு நுகர்வோருக்கு வழங்க முடியும் எனவும், எனினும் தொழில்துறையினர் அந்தச் சலுகையை மக்களுக்கு வழங்குவதில்லை எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.


விசேட கலந்துரையாடல்

இதனிடையே கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடலின் போது, இன்று (02.09.2023) முதல் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 1,250 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு இணக்கம் எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

இந்த கலந்துரையாடலின் போது மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் தொடர்பில் கால்நடை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர கருத்து வெளியிட்டார்.

“சோளம் இறக்குமதியை அனுமதிப்பதாகவும், அதற்கு விதிக்கப்பட்ட வரியைக் குறைப்பதாகவும் விவசாய அமைச்சரிடம் உறுதியளித்தோம். வரியைக் குறைத்துள்ளோம்.

கோழியின் விலையை குறைக்க திட்டம்

தற்போது மக்காச்சோளத்துக்கு இறக்குமதி உரிமம் வழங்குகிறோம். அவற்றை இறக்குமதி செய்ய இரண்டு மூன்று வாரங்கள் ஆகும்.

இன்றைய நிலவரப்படி இலங்கையில் உள்ள ஒவ்வொரு பல்பொருள் அங்காடியிலும் கோழி இறைச்சியை 1250 ரூபாய்க்கு வாங்கலாம்.

மேலும், வங்கிகளிலும் வட்டி குறைந்துள்ளது. அந்த சலுகையால் எங்களது உற்பத்தி அதிகரித்தது. தேவை மற்றும் விற்பனைக்கு ஏற்ப கோழியின் விலையை மேலும் குறைக்க திட்டமிட்டுள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top