இலங்கையில் இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு

keerthi
0

 



இலங்கையில் இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர்  ஷெரீன் பாலசிங்கம் கூறியுள்ளார்.


2020 ஆம் ஆண்டில் அரசாங்க வைத்தியசாலைகளில் 52% மரணங்கள் மாரடைப்பால் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.


சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சமூக வைத்திய நிபுணர் ஷெரீன் பாலசிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


“2021ஆம் ஆண்டில், அரசாங்க வைத்தியசாலைகளில்  18-28 மற்றும் 29-39 வயதுக்குட்பட்ட ஆண்களும் பெண்களும் ischemic heart disease நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் பாரிய பிரச்சனையாகும்."


இதேவேளை, பொதுவான நோய் நிலைமைகளுக்கான மருந்துகளை பெறும் நடைமுறையின் ஊடாக மருந்துகளைப் பெறுவதில் பல குறைபாடுகள் இருப்பதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ்  தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top