இலங்கையில் படுகொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நான்கு பேருக்கு களுத்துறை மேல் நீதிமன்றதினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கூரிய ஆயுதங்களைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது என நீதிமன்ற விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதாவது 1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி களுத்துறை மதினகந்த பிரதேசத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக சொல்லப்படுகின்றது.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஏழு பேருக்கு எதிராக சட்டமா அதிபர், களுத்துறை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் முதலாம் இரண்டாம் மூன்றாம் மற்றும் ஐந்தாம் பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
அத்தோடு வழக்கின் 6ஆம் மற்றும் பிரதி7ஆம் பிரதிவாதிகள் குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் நான்காவது பிரதிவாதி வழக்கு விசாரணைகளின் போது உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.