தொடருந்து இன்ஜின் செயற்பொறியாளர் சங்கமானது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
எனினும் குறித்த பணிப்புறக்கணிப்பை நாளை(12.09.2023) முன்னெடுக்கவுள்ளதாக தொடருந்து இன்ஜின் செயற்பொறியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும் தொடருந்து அதிகார சபைக்கு அறிவித்து இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறுஇருக்கையில் தர அடிப்படையில் பதவி உயர்வுகளை விரைவுபடுத்த நீண்ட நாள் கோரிக்கை விடுத்தும் 5 ஆண்டுகளாக தாமதமாகி வரும் நிலையில் தீர்வு கிடைக்காததால் இன்ஜின் இயக்க பொறியாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவுத்துள்ளது.