ரஷ்யாவிற்கு வடகொரிய ஜனாதிபதியான கிம் ஜொங் உன் இந்த மாதம் விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்தோடு அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து, உக்ரைனுக்கு எதிரான போருக்கான ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக நிவ்யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்காக வடகொரிய அதிபர் கிம் பியோங்யாங்கில் இருந்து கவச ரயிலில் ரஷ்யாவுக்கு பயணம் செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், சந்திப்பு இடம்பெறும் இடம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
மேலும் உக்ரைனுக்கு எதிரான போருக்காக ரஷ்யாவுக்கு அதிகளவில் ஆயுதங்களை வழங்க வடகொரியா தயாராகி வருவதாக அண்மையில் வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த இரண்டு நாடுகளினதும் தலைவர்களின் சந்திப்பு தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் - ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில் வட கொரியா அதிக ஆயுதங்களை வழங்கக்கூடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.