கிளிநொச்சி செல்வநகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
2 குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுமி ஒரு வயதும் 3 மாதமும் நிறைவடைந்த பெண் குழந்தை எனவும், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறுஇருக்கையில் , ஹபராதுவ, கடலுவ பாலத்திற்கு அருகில் உள்ள வாவியில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போன 14 வயது சிறுவனை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வரகாபொல பிரதேசத்தைச் சேர்ந்த குழுவினருடன் சுற்றுலாவிற்கு சென்றிருந்த போதே குறித்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகின்றது.