கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட தொடருந்து ஒன்றின் கூரை மீது அமர்ந்து பயணித்த ஒருவர் உயிரிழந்தார்.
தொடருந்து பணியாளர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக, சன நெரிசல் காணப்பட்டமையினால் அவர் இன்று காலை தொடருந்தின் கூரை மீது அமர்ந்து பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இதனையடுத்து, ஹொரப்பே பகுதியில் அவர் தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கம்பஹா மொரகொட பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.