நடிகை ஆலியா விஜய் சேதுபதி பற்றி பேட்டியில் பேசியுள்ளார்.
ஜவான் பட நடிகை
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வந்த நிலையில், இந்தப் படத்தின் மூலம் கிங் கானுக்கு வில்லனாக மாறியுள்ளார். நடிகை பிரியாமணி, சஞ்சய் தத், யோகி பாபு உள்ளிட்ட பலர் ஜவான் படத்தில் நடித்துள்ளனர். இதில் ஷாருக்கானின் பெண்கள் டீமில் நடித்துள்ள ஆலியா குரேஷி பேட்டியளித்துள்ளார்.
ஆலியா பேட்டி
இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில், " எனக்கு விஜய் சேதுபதி ரொம்பவே பிடிக்கும், அவரை பற்றி யாரவது தவறாக பேசினால் நான் சண்டைக்குப்போவேன். இதற்கு முன் அவரை சூப்பர் டுலெக்ஸ் படத்தில் பார்த்தேன் அருமையாக இருக்கும்.
அவர் ஒரு மென்மையான மனிதர், அவருடன் பேசும்போது பெரிய நடிகரிடம் பேசுவது போல் இருக்காது, ரொம்ப எளிமையாக இருப்பார். அவர் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, தனித்தன்மையுடன் வலம் வருகிறார். அவரது நடிப்பை மட்டுமல்லாமல், அவரிடம் உள்ள நல்ல பண்புகளையும் திறமையும் எனக்கு பிடிக்கும்" என்று கூறியுள்ளார்..