சர்வதேச காற்பந்து சம்மேளனத்தினால் தடைவிதிக்கப்பட்டிருந்த இலங்கை காற்பந்து சம்மேளனத்திற்கான உத்தியோகபூர்வ தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.
இதனை கண்காணிப்பதற்காக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் நான்கு பிரதிநிதிகள் நேற்று நாட்டை வந்தடைந்தனர்.
அத்தோடு சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் உறுப்பு நாடுகளின் உள் விவகாரங்களுக்குப் பொறுப்பான துறையின் பணிப்பாளரும் நாட்டை வந்தடைந்துள்ளார்.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ தேர்தல் இன்று பிற்பகல் டொரிங்டன் பிளேஸில் உள்ள விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதுடன், 67 கழகங்களின் பிரதிநிதிகள் இதில் பங்குபற்றவுள்ளனர்.
மேலும் அனுராதபுர கழகத்தின் தலைவர் தக்ஷித சுமதிபாலவும், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் நேற்றிரவு இறுதி அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.