திருகோணமலை நிலாவெளி இலுப்பபைக்குளம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடாத்துவதற்கு எதிராக எட்டு பேருக்கு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் எம்.பி.அன்ஃபார் தடைவுத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்தோடு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராசமாணிக்கம் சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும் உள்ளடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நிலாவெளி காவல்துறை பொறுப்பதிகாரி திருகோணமலை நீதிவானிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை - இலுப்பை குளம் பகுதியில் இடம்பெறும் விகாரையின் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ள போதிலும் கடந்த வாரம் முதல் குறித்த நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறுஇருக்கையில் குறித்த நிர்மாணப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவிருந்த நிலையில், நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.