இஸ்ரேலில் நேபாள மாணவர்கள் 10 பேர் பலி..!

keerthi
0






 இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான மோதலால் நேபாள மாணவர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள தூதரகம் அறிவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. ஒருகாலத்தில் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேல் வசம் இருந்தது. எனினும் தற்போது அது பாலஸ்தீனத்தில் உள்ள நிலையில் ஹமாஸ் அமைப்பினர் காசா பகுதியை நிர்வகித்து வருகின்றனர். இதனால் காசா பகுதிக்குள் இஸ்ரேலால் நுழைய முடியாத நிலை உள்ளது. இத்தகைய சூழலில் தான் காசாவை கைப்பற்ற இஸ்ரேல் முயற்சிக்கிறது.எனினும் இதற்கு ஹமாஸ் அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

 

இதனால் தான் ஹமாஸ் அமைப்பை தீவிரவாத அமைப்பாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதோடு பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. அத்தோடு இன்று காலையில் மோதல் போராக உருவாகி உள்ளது. கடந்த 2021-ல் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே பெரிய அளவிலான மோதல் வெடித்தது. போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்ட நிலையில் பல்வேறு நாடுகள் தலையீட்டின் பேரில் இந்த மோதல் ஓரளவு முடிவுக்கு வந்தது.


இவ்வாறுஇருக்கையில், நேற்று பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது வெறும் 20 நிமிடங்களில் 5,000 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினர். யாருமே எதிர்பார்க்காத வகையில் நேற்று அந்நாட்டு நேரப்படி காலை 6.30 மணிக்கு இஸ்ரேல் நாட்டை நோக்கி பாலஸ்தீன் ஹமாஸ் மிக மோசமான தாக்குதலை முன்னெடுத்தது. ஏவுகணைகள் மழைபோல இஸ்ரேலை நோக்கி பாய்ந்தன. எனினும் இதற்கு பதிலடி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இஸ்ரேலில் இருந்து ராணுவ போர் விமானங்களின் காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் உள்ள இடங்களில் தாக்குதலை தொடர்ந்துள்ளனர்.



அத்தோடு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசா பகுதியில் பாலஸ்தீனியர்கள் நுற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல், ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதல்களில் இஸ்ரேலிலில் 600க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வன்முறையாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேலில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இதனால், இஸ்ரேலில் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு பல்வேறு நாடுகளும் தங்கள் குடிமக்களை கேட்டுள்ளது.


இந்த நிலையில், இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான மோதலால் நேபாள மாணவர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள தூதரகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தை சேர்ந்த 7 பேர் காயம் அடைந்ததாகவும் 17 பேர் பிணைக்கதிகளாகவும் பிடித்து வைக்கப்பட்டு இருப்பதகாவும் இஸ்ரேலுக்கான நேபாள தூதர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top