மேற்கு ஆப்கானிஸ்தானில், ஈரானுக்கு அருகே ஏற்பட்ட நிலஅதிர்வை அடுத்து அங்கு நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.
இதுவரையில் 120 பேரின் உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அத்தோடு ஆப்கானிஸ்தானின் மேற்கு நகரமான ஹெராட்டில் இருந்து 40 கிலோமீற்றர் தொலைவில் 6.3 மெக்னிடியுட் அளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
இதனையடுத்து மூன்று பின்னதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.