இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள அரச வைத்தியசாலையில் , ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு மருந்துப் பற்றாக்குறை மற்றும் போதிய பணியாளர்கள் வைத்தியசாலையில் இல்லாமையினால் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் உயிரிழந்த 24 பேரில் 12 குழந்தைகளும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.