பாலஸ்தீனில் இஸ்ரேல் குண்டு மழை- இன்று 4 வது நாளாக தொடரும் போர்..!

keerthi
0





 இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே போர் தொடங்கி இன்று 4 வது நாளை எட்டி இருக்கும் சூழலில் இரு நாடுகளிலும் பலி எண்ணிக்கை 1,500 ஐ நெருங்கி உள்ளது.



இஸ்ரேல் தனது அண்டை நாடான பாலஸ்தீனின் காசா, மேற்கு கரை, ஜெருசலேம் பகுதிகளை ஆக்கிரமிக்க அந்நாடு மீது பல ஆண்டுகளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இஸ்ரேல் படையினர் காசாவுக்குள் நுழைந்து தாக்கி, ஜெருசலேமில் உள்ள அக்சா மசூதிக்கு நுழைய முயன்ற பாலஸ்தீனர்களை விரட்டி அடித்தனர். பல ஆண்டுகளாக பாலஸ்தீன் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களால் பல லட்சம் பாலஸ்தீன் மக்கள், பெண்கள், குழந்தைகள் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர்.



பாலஸ்தீனின் நிலங்களை 70 ஆண்டுகளாக ஆக்கிரமித்து பெரும்பாலானவற்றை வசப்படுத்திய இஸ்ரேல் மீதம் இருக்கும் நிலப்பகுதிகளை கைப்பற்ற தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இஸ்லாமியர்களின் 3 வது புனித தலமான அக்சா மசூதிக்குள் பாலஸ்தீனர்கள் தொழுகை நடத்த இஸ்ரேல் தடை விதித்ததால் பதற்ற நிலை தொடர்ந்து அதிகரித்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்ஜோர்டான் வெளியுறவுத் துறை அமைச்சர் அல் அக்சா மசூதிக்கு சென்றபோது இஸ்ரேலிய படைகள் காலணிகளுடன் நுழைந்ததாக கூறப்படுகிறது.



அத்தோடு இஸ்ரேல் படைகள் அங்குள்ள இஸ்லாமிய தலைவர்களின் கல்லறைகளை சேதப்படுத்தியதை கண்டித்து ஜோர்டான், பாலஸ்தீன் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில்தான் பாலஸ்தீனிலிருந்து இஸ்ரேலை நோக்கி கடந்த சனிக்கிழமை திடீரென ராக்கெட்டுகள் பாய்ந்து உள்ளன. காசா பகுதியிலிருந்து பாய்ந்த அந்த 5000 ஏவுகணைகள் இஸ்ரேலின் ஆயுத கிடங்குகள், ராணுவ மையங்கள், விமான நிலையங்களை தாக்கி உள்ளன. காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு ஆபரேசன் அல் அக்சா பிலட் என்ற பெயரில் இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளது.


ஹமாஸ் அமைப்பின் ராணுவ தலைவராக இருக்கும் முஹம்மது தெய்ப், "இஸ்ரேல் அல் அக்சா மசூதியை இழிவுபடுத்தியது. இஸ்லாமியர்கள் மீது அந்த தாக்குதல் நடத்தினார்கள். நாங்கள் எதிரியை எச்சரித்தோம். எனினும் இதற்கு ஹமாஸ் பதிலடி தரும் வகையில் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது. துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை யாரெல்லாம் வைத்து இருக்கிறீர்களோ அவர்கள் வெளியில் எடுங்கள். நமக்கான நேரம் இது." என்று அவர் அழைப்பு விடுத்தார்.



எனினும் இதனை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு போர் பிரகடனத்தை அறிவித்து பாலஸ்தீன் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலும் நடத்தப்பட்டது. கடந்த ஞாயிறு அன்று இஸ்ரேல் நாடாளுமன்றம் காசா உடனான போருக்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியது. இரு தரப்பினரும் ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பாலஸ்தீனுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் களமிறங்கி உள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீன் மீது தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி தாக்கி வருவதுடன், விடிய விடிய போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி வருகிறது. இது வரை இதுவரை 800 க்கும் அதிகமான இஸ்ரேலியர்களும், 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் இந்த போரில் கொல்லப்பட்டு உள்ளனர்

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top