காசாவில் இதுவரை 40 சதவீதமான சிறார்கள் உயிரிழப்பு

keerthi
0




இஸ்ரேல் வான் தாக்குதலை ஆரம்பித்த நாள் முதல் இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


கொல்லப்பட்டவர்களில் 40 சதவீதமானோர் சிறார்கள் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.அத்தோடு  15 ஆயிரத்திற்கும் அதிகமானனோர் காயமடைந்துள்ளதாக அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வான்வழி தாக்குதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களை சேர்ந்த சுற்று வட்டத்தில் இருந்த ஆயிரத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காசாவில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.


இவ்வாறுஇருக்கையில், 222 இஸ்ரேலியர்கள் தற்போது பணய கைதிகளாக ஹமாஸ் வசம் உள்ளதாக, காசாவில் நிலைகொண்டுள்ள வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


பணயக்கைதிகள் சிலரது புகைப்படங்களும், காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top