50 ஆண்டு கோபம்... நேரம் பார்த்து இஸ்ரேலை அடிக்கும் ஹமாஸ்! ரத்த சரித்திரத்தின் பின்னணி இது தான்..!

keerthi
0





 இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே நீண்டகாலமாக தொடரும் மோதல் நேற்று போராக மாறியுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதல் தான் இதற்கு முக்கிய காரணமாகும். இவ்வாறுஇருக்கையில்  தான் யாரும் எதிர்பாராத வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தாலும் கூட அதற்கு அக்டோபர் மாதத்தை தேர்வு செய்ததன் பின்னணியில் 50 ஆண்டு வரலாறு உள்ளதாம்.


இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் தொடங்கி உள்ளது. நேற்று காலையில் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசாவில் இருந்து ஹமாஸ் தீவிராவதிகள் இஸ்ரேல் மீது 5 ஆயிரம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். அத்தோடு  ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.


இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்து போனது. மக்கள் அனைவரும் உயிர் காக்கும் வகையில் வீடுகளில் முடங்கினர். அதோடு இஸ்ரேலும் பதிலடியை தொடங்குவதாக அறிவித்தது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் தொடங்கி விட்டதாக பகிரங்கமாக அறிவித்தார்.


இஸ்ரேலின் தெற்குபகுதியில் உள்ள நகரங்களில் நுழைந்த ஹமாஸ் தீவிராதிகளை இஸ்ரேல் படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். அதேபோல் காசா பகுதிகளிலும் போர் விமானங்கள் மூலம் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் படையை தாக்கி வருகின்றனர். இப்படி போர் நடந்து வருகிறது. தற்போது வரை 500க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.


இவ்வாறுஇருக்கையில்  தான் இஸ்ரேலை பழிவாங்க துடித்த ஹமாஸ் தீவிரவாதிகள் அவர்களுக்கு எதிராக மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டு வந்துள்ளனர். இந்த திட்டத்தை தான் அவர்கள் நேற்று செயல்பாட்டுக்கு கொண்டு வந்து ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளனர். மேலும் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அக்டோபர் மாதத்தை ஏன் தேர்வு செய்தது? என்பதன் பின்னணியில் உள்ள விபரம் வெளியாகி உள்ளது.


அதாவது தற்போதைய காசா உள்பட பாலஸ்தீனத்தின் வேறு சில பகுதிகளில் இதற்கு முன்பு இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருந்தது. அதாவது கடந்த 1967 ல் 6 நாட்கள் நடந்த போர் மூலம் கோலன் ஹைட்ஸ், சினாய் உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. இதனை அரபு நாடுகள் விரும்பவில்லை.


இந்நிலையில் தான் கடந்த 1973ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் வந்தது. அப்போது அரபு நாடுகளின் கூட்டமைப்பு பாலஸ்தீனத்தில் உள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதிகள் மீது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தாக்குதல்களை நடத்தியது. இதையடுத்து இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது. இருதரப்புக்கும் யுத்தம் தொடங்கிய நிலையில் யோம் கிப்பூர் போர் உருவானது.


அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி /ரிச்சர்ட் நிக்சன் உலகளாவிய அணுஆயுதம் தொடர்பாக எச்சரிக்கையும் செய்தார். அதோடு ஓபிஇசி எனும் பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு சார்பில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதியை நிறுத்தின. இது உலகளவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது.


இதற்கிடையே 2 வாரங்கள் நடந்த யோம் கிப்பூர் போரில் 20 ஆயிரம் பேர் பலியாகினர். பாலஸ்தீனத்துக்கு அதிக உயிர் பலி ஏற்பட்டது. மேலும் போர் முடிவில் ஏற்கனவே இஸ்ரேல் கைப்பற்றி இருந்த பகுதிகளை விட கூடுதலான இடங்களை தன்வசப்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் 50 ஆண்டுகள் கழித்து அதே அக்டோபர் மாதத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை 30 நிமிடங்களில் இஸ்ரேல் மீது ஏவி ஹமாஸ் அமைப்பு தாக்குதலை தொடங்கி உள்ளது. மேலும் இதன்மூலம் அரபு நாடுகள் அனைத்தும் தங்களுக்கு ஆதரவாக களமிறங்க வேண்டும் என்பதை ஹமாஸ் உணர்த்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top