நிலவும் சீரற்ற காலநிலையினால் ஆயிரத்து 690 குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரத்து 443 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால், தென் மாகாணத்திலேயே அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தென்மாகாணத்தில் ஆயிரத்து 160 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊவா மாகாணத்தில் 453 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 674 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.