பிக் பாஸ் 7ம் சீசன் வீட்டுக்குள் தற்போது 18 போட்டியாளர்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றனர். முதல் ஆளாக வந்த கூல் சுரேஷை கன்பெக்ஷன் ரூமுக்கு வர வைத்து பிக் பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்தார்.
அத்தோடு முதல் ஆளாக வந்த நீங்கள் தான் இந்த வார கேப்டன். ஆனால் அடுத்து வரும் போட்டியாளருடன் விவாதித்து வெற்றி பெறும் நபர் தான் கேப்டன் ஆவார். இந்த கடைசி போட்டியாளர் வீட்டுக்குள் வரும் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த டாஸ்கில் பல போட்டியாளர்கள் எளிதில் விட்டுக்கொடுத்துவிட்டனர். ஆனால் சில போட்டியாளர்கள் விடாப்பிடியாக வாக்குவாதம் செய்தனர். அதனால் வாக்குவாதம் செய்த இரண்டு பேருக்கும் அந்த பட்டம் கிடைக் காமல், அடுத்து வரும் நபருக்கு அந்த வாய்ப்பு சென்றுவிட்டது.
விஷ்ணு, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோருக்கு இடையே இந்த விஷயத்தால் பெரிய வாக்குவாதம் நீண்ட நேரம் நடந்தது. அதனால் கடைசி ஆளாக வந்த விஜய்க்கு கேப்டன் வாய்ப்பு எளிதாக கிடைத்துவிட்டது.