இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 2022ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட 9 மருந்து வகைகளில் பாரிய சிக்கல்கள் காணப்படுவதாக கணக்காய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும் இதன்காரணமாக 156 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.
அத்தோடு கடந்த வருடம் கொள்வனவு செய்யப்பட்ட சில மருந்து வகைகளின் தரம், காலாவதி திகதி உள்ளிட்ட சில விடயங்களில் சர்ச்சைகள் உள்ளதாக அந்த கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.