மின்சாரம், குடிநீர் கட்- அந்த 97 பேர் வந்தாதான் எல்லாம் நடக்கும்.. இஸ்ரேல் அமைச்சர் கறார்..!

keerthi
0




 காசா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், ஹமாஸ் வசம் இருக்கும் இஸ்ரேலிய பிணை கைதிகள் விடுவிக்கப்படும் வரை காசாவுக்கு, தண்ணீர், மின்சாரம், எரிபொருள் வழங்கப்படாது என இஸ்ரேலிய அமைச்சர்  தெரிவித்துள்ளார்.


இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி, யூதர்களை தேடி தேடி வேட்டையாடியது. இதிலிருந்து தப்பியவர்கள் கப்பலில் பாலஸ்தீனத்திற்கு வந்தடைந்தார்கள். இப்படி வரும்போது அவர்கள் பேனர் ஒன்றை கையில் ஏந்தியிருந்தார்கள். அத்தோடு அதில், "ஜெர்மனி எங்கள் குடும்பங்களை அழித்துவிட்டது. நீங்கள் எங்கள் நம்பிக்கையை அழித்துவிடாதீர்கள்" என்று எழுதப்பட்டிருந்து. இதான் யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் நுழைந்த வரலாறு. இவர்களுடைய மோசமான நிலையை பார்த்த ஐநா சபை 1947ம் ஆண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவெடுத்தது.எனினும் இதற்கான வாக்கெடுப்பில் ஐநாவின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது தனிக்கதை.


அதன் பின்னர் 1949 முதல் 1967ம் ஆண்டு வரை இஸ்ரேல் பாலஸ்தீனத்தை மிக தீவிரமாக ஆக்கிரமிக்க தொடங்கியது. தற்போது மிக மிக சொச்சமான அளவில் உள்ள நிலப்பரப்பில்தான் பாலஸ்தீனியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அத்தோடு இந்த சொச்சமான நிலப்பரப்பில் காசாவும் ஒன்று. சுமார் 25 மைல் நீளமும், 6 மைல் அகலமும் கொண்ட இந்த துண்டு நிலத்தில் சுமார் 23 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த இடத்தை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால் பாலஸ்தீனிய போராளிகள் இதனை தடுத்து வருகின்றனர். எனவே இந்த துண்டு நிலத்தை இஸ்ரேல் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றியிருக்கிறது.


எனினும் இதற்கு எதிராக குரல் கொடுத்த அமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் இந்த அமைப்புகள் வேறு வழியின்றி ஆயுத போராட்டத்தை கையில் எடுத்தன. அப்படிதான் ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. மத்திய கிழக்கின் இரும்புக்கோட்டை என்று சொல்லிக்கொண்டிருந்த இஸ்ரேல் மீது இப்படியான தாக்குதல், அவுதும் காசா எனும் சிறிய பகுதியிலிருந்து தொடுக்கப்பட்டது உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இதனையடுத்து இஸ்ரேல் 5வது நாளாகா காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.


காசாவை சுற்றி இஸ்ரேல்தான் இருக்கிறது. காசாவுக்கு தண்ணீர், மின்சாரம் என எது வேண்டுமானாலும் அது இஸ்ரேலின் கரிசனம் இல்லாமல் கிடைக்காது. ஆனால் ஹமாஸின் தாக்குதலையடுத்து தற்போது இவையாவும் கட் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு காசா மக்களிடையே குடிநீருக்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் தற்போது 1,200 காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 5,600க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஒருபுறம் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. மறுபுறம் மருந்துகளை கொண்டு வந்த டிரக்குகள் இஸ்ரேல் படையினரால் திருப்பியனுப்பப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருக்கிறது.


மேலும் இது சர்வதேச போர் குற்றம் என ஹமாஸ் விமர்சித்துள்ளது. போர் நடப்பது ஹமாஸ் படைகளுக்கும், இஸ்ரேல் படைகளுக்கும் இடையில்தான். ஆனால் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை கொன்று குவித்து வருவதாகவும், உலக நாடுகள் தடை செய்த பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளது. இப்படி இருக்கையில் காசாவுக்கு செல்லும் குடிநீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் இணைப்பையும் இஸ்ரேல் துண்டித்திருப்பது சர்வதேச போர் குற்றம் என ஹமாஸ் கூறியுள்ளது.


இதற்கு பதிலளித்துள்ள இஸ்ரேலின் எரிசக்தி துறை அமைச்சர் 'இஸ்ரேல் காட்ஸ்', "ஹமாஸ் படையினர் பிடித்து சென்ற இஸ்ரேலிய பிணை கைதிகளை விடுவிக்கும் வரை காசாவுக்கு குடிநீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் என எதையும் தர முடியாது.அத்தோடு எங்களுக்கு யாரும் ஒழுக்கத்தை கற்றுதர வேண்டாம்" என்று கூறியுள்ளார். தற்போது வரை 97 பேர் பிணை கைதிகளாக காசாவுக்கு ஹமாஸ் படையினர் அழைத்து சென்றிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை  தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top