யுக்ரேனில் நிலக்கீழ் பாடசாலைகளை அமைப்பதற்கு யுக்ரேன் தீர்மானித்துள்ளது. யுக்ரேன் மற்றும் ரஸ்யாவிற்கிடையே மோதல் இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறுஇருக்கையில், ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, யுக்ரேனின் கிழக்கு நகரான கார்கிவ்வில் பாடசாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் புதிய நவீன வேலைத்திட்டங்களை கொண்டு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு யுத்தம் ஏற்பட்ட காலத்தில் இருந்து யுக்ரேனிய சிறுவர்களின் கல்வி பாரியளவு பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், இவ்வாறான புதிய கல்வி நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக யுக்ரேன் குறிப்பிட்டுள்ளது.